shadow

விஜய்க்காக பார்த்து பார்த்து டியூன் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த சில வாரங்களுக்கு முன்பே இந்த படத்தின் பாடல் கம்போஸ் பணியை தொடங்கிவிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் விஜய்க்காக ஸ்பெஷலாக பார்த்து பார்த்து ஒரு அட்டகாசமான டியூனை போட்டு முடித்து ஒலிப்பதிவும் செய்துவிட்டாராம்.

இந்த பாடலின் படப்பிடிப்புதான் விரைவில் ராஜஸ்தானில் தொடங்கவுள்ளது. ‘அழகிய தமிழ்மகன்’ படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ள ரஹ்மான், இந்த படத்தில் கொடுக்கப்போகும் பாடல்களை வைத்து, அடுத்தடுத்து விஜய் படத்திற்கு ரஹ்மான் தான் என்ற நிலையை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துவருகிறது. அட்லி இந்த படத்தை இயக்கி வருகிறார்.

Leave a Reply