shadow

இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. சு.சுவாமிக்கு ரகுராம் ராஜன் பதிலடி

raguram_rajan_2673939fஇந்திய ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் அந்த பதவிக்கு தகுதியற்றவர் என்று ராஜ்யசபா எம்.பியும் பாஜகவின் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி நேற்று பரபரப்பான ஒரு கருத்தை கூறிய நிலையில் நாட்டுக்காக செய்ய வேண்டியது இன்னும் நிறைய உள்ளது என்று சூசகமாக ரகுராம் ராஜன் கூறியுள்ளார் .

லண்டன் சுற்றுப்பயணத்தில் இருக்கும் ரகுராம் ராஜன் சி.என்.பி.சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பொருளாதாரச் சூழ்நிலையை மேம்படுத்த நடவடிக்கைகளை செயல்படுத்த வைப்பதில் நிறைவடைந்துள்ளேன். இந்தப் பணியை ஒவ்வொரு கணத்திலும் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன்”

தற்போதைய 3 ஆண்டுகால பதவிக்காலம் வரும் செப்டம்பரில் நிறைவடைவதையடுத்து, இன்னொரு முறையும் ஆர்பிஐ கவர்னராக பொறுப்பேற்க நேராவிட்டால் செய்த விஷயங்கள் பல பாதியிலேயே விட்டு விட்டுச் செல்வதாக கருதுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ரகுராம் ராஜன் “இது ஒரு நல்ல கேள்வி. நாங்கள் நிறைய விஷயங்களைப் பூர்த்தி செய்துள்ளோம், ஆனாலும்…இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்றே கருதுகிறேன்” என்று கூறினார். இந்த பதிலை அவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு கூறியதாகவே கருதப்படுகிறது.

மேலும் லண்டனில் சிகாகோ பூத் பிசினஸ் பள்ளியில் அவர் நேற்று உரையாடினார். அதில் கூறியபோது, “பரவலாக, முக்கிய பணவீக்க விகிதம் நாம் விரும்புவதை விட அதிகமாகவே உள்ளது, ஆனால் நிலையற்று உயர்வும் தாழ்வுமாக இருக்கவில்லை.

நாம் மெதுவான ஒரு பொருளாதார முன்னேற்றத்துக்கான சூழலின் நடுவில் இருக்கிறோம். வேகமான வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிகின்றன. நல்ல பருவமழை நிச்சயம் வேகமான வளர்ச்சியை முடுக்கிவிடும்.

வங்கிக் கடன் விவகாரத்தில் திவால் சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் வங்கிகளுக்கு இந்த வாராக்கடன் விவகாரத்தில் செயல்பட போதுமான சட்ட உபகரணங்கள் தற்போது உள்ளன. அனைத்தையும் கிளீன் – அப் செய்து விட்டால் கடன் அளிக்க வங்கிகளுக்கு வசதியாக அமையும்.

நம் நாட்டினால் உள்நாட்டு பணத்திலேயே சுதந்திரமாகவும் நீண்ட கால அடிப்படையிலும் கடன் பெற முடியும் எனும்போது டாலர்களை வாங்கும் திட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டிய காரணங்கள் எதுவும் இல்லை. தொடர்ந்து உள்நாட்டிலேயே கடன் வாங்குவது தொடரும்.

நாம் அடிப்படைகளைச் சரி செய்ய வேண்டும் மற்றும் அயல்நாட்டு முதலீட்டை அதிகம் நம்பியிருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே நமக்கான பாடமாகும். இதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.

Leave a Reply