கொரோனா அடுத்த கட்ட நிதி

திடீரென பின் வாங்கினாரா ராகவா லாரன்ஸ்?

கொரோனா நிதியாக ரூ 3 கோடி அளிக்க உள்ளதாக நேற்று ராகவா லாரன்ஸ் அறிவித்த நிலையில் இன்று காலை அவர் தனது டுவிட்டர் தளத்தில் மேலும் சில கோடிகள் நிதி உதவி செய்யப் போவதாகவும் இதுகுறித்த அறிவிப்பை 5 மணிக்கு வெளியிட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் இன்று மாலை சரியாக 5 மணிக்கு தனது ஆடிட்டர் இதுகுறித்து முடிவெடுக்க 2 நாட்கள் கால அவகாசம் கேட்டு இருப்பதாகவும் அதனால் தனது அடுத்த நிதியுதவி குறித்த அறிவிப்பை ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியிட இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்

ஏப்ரல் 14ம் தேதி ராகவா லாரன்ஸ் என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply