shadow

அஜித்-விஜய்க்காக விட்டுக்கொடுத்த ராகவா லாரன்ஸ்

ragava 1கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் திரையுலகில் உள்ள பலருக்கு உதவி செய்திருந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒருவர் உதவி செய்துள்ளார். அவர் தான் ராகவா லாரன்ஸ்

விஜய் நடித்து வரும் 60வது படத்தின் டைட்டில் ‘பைரவா’ என்று நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த டைட்டிலை விஜய்க்கு கொடுத்தது ராகவா லாரன்ஸ் என்று தெரியவந்துள்ளது.

ஏற்கனவே அவர் தயாரித்து, நடித்து, இயக்கவுள்ள ஒரு படத்திற்காக ‘கால பைரவா’ என்ற தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தார். இந்நிலையில் தனது நண்பர் விஜய்க்காக இந்த டைட்டிலை அவர் விட்டுக்கொடுத்துள்ளார்.

ஏற்கனவே ‘வேதாளம்’ படத்தின் டைட்டிலையும் அஜித்துக்காக ராகவா லாரன்ஸ் கடந்த ஆண்டு விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply