ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆடவர் சாம்ப்யன் பட்டம் வென்று சாதனை படைத்த வீரர்!

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தார்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கால் வலியால் அவதிப்பட்ட நடால் அதன்பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஆக்ரோஷமாக விளையாடிய ரபேல் நடால் வென்று சாதனை படைத்துள்ளார். இது அவரது 21வது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் வீரரை 2-6, 6-7, 6- 4. 6- 4, 7-5 என்ற கணக்கில் ரஃபேல் நடால் வென்றார்.