அரசியலில் குதித்த ராதிகா: சென்னையின் முக்கிய தொகுதியில் போட்டி!

நடிகை ராதிகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் முழுநேர அரசியல்வாதியாக மாறிய நிலையில் தற்போது அவர் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ராதிகா முதன்முதலாக தேர்தலில் போட்டியிட உள்ளதை அடுத்து அவரை வெற்றிபெற வைக்க அவரது கட்சியின் தொண்டர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர்

மேலும் அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியும் ராதிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply