shadow

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் புதிய சாதனை
queen-elizabeth-1-435
இங்கிலாந்து நாட்டின் தற்போதைய ராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத், இதற்கு முன்னர் அதிக வருடங்கள் ராணியாக இருந்தவரின் சாதனையை இன்று அவர் சமன் செய்துள்ளார். அவர் பதவியேற்று 63 ஆண்டுகள் 216 நாட்கள் ஆகிறது. இதற்கு முன்னர் இவரது முப்பாட்டாரின் மனைவி விக்டோரியா 63 ஆண்டுகள் 216 நாட்கள் ராணியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்த சாதனையை இரண்டாம் எலிசபெத் நாளை முறியடிக்கவுள்ளார். இங்கிலாந்து ராணியாக அதிக ஆண்டுகள் பதவி வகித்தவர் என்ற பெருமையை இவர் நாளை பெறவுள்ளார்.

இரண்டாம் எலிசபெத் ராணியாக மாறியதே ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எலிசபெத்தின் பெரியப்பா எட்வர்ட் மன்னராக இருந்தார். அவர் தனது அமெரிக்க காதலி வாலிஸ் சிம்ப்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் விவாகரத்து ஆனவர். எனவே முறையற்ற காதலை அரண்மனை நிர்வாகம் ஏற்காததால் அவர் மன்னர் பதவியை இழந்தார்.

அவரை தொடர்ந்து எலிசபெத்தின் தந்தை ஆல்பர்டுக்கு மன்னர் பதவி கிடைத்தது. இவரது மூத்த மகள்தான் ராணி எலிசபெத். அவர் மறைவுக்கு பின் இவர் ராணி ஆனார். இவரது கணவர் பெயர் இளவரசர் பிலிப் மவுண்ட் பேட்டன். கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்.

இவரை காதலித்து ராணி எலிசபெத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இளவரசர் சார்லஸ், இளவரசி ஆன்னி உள்ளிட்ட 4 பிள்ளைகளும், 8 பேரன், பேத்திகளும், 5 கொள்ளு பேரன்-பேத்திகளும் உள்ளனர்

Leave a Reply