க்யூஆர் கோட் மூலம் பிச்சையெடுக்கும் டிஜிட்டல் பிச்சைக்காரர்!

கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் இந்தியா உருவாகி வரும் நிலையில் பிச்சைக்காரர் ஒருவர் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுத்து வருகிறார்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சம்பரன் என்ற மாவட்டத்தில் உள்ள ராஜூ படேல் என்பவர் தனக்கென ஒரு க்யூஆர் கோட் அடங்கிய அட்டையை தயார் செய்து அதை கழுத்தில் அணிந்து கொண்டு பிச்சை எடுக்கிறார்.

தற்போது பெரும்பாலானோர்பர்ஸில் பணம் வைத்த்து கொள்வதில்லை என்றும் செல்போன் மூலமும் கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் மூலம் பெரும்பாலான பரிவர்த்தனை செய்வதால் தனக்கென ஒரு க்யூஆர் கோட் வாங்கி அதை கழுத்தில் அணிந்து கொண்டு பிச்சை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.