இப்படியெல்லாமா நியூஸ் போடுவிங்க: புஷ்பவனம் குப்புசாமி மகள் கண்டனம்!

இப்படியெல்லாமா நியூஸ் போடுவிங்க: புஷ்பவனம் குப்புசாமி மகள் கண்டனம்!

புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி ஆகியோர்களின் மகள் காணாமல் போய்விட்டதாகவும் இதனையடுத்து புஷ்பவனம் குப்புசாமி நேற்று சென்னையில் உள்ள காவல் நிலையம் சென்று தனது மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்ததாகவும் நேற்று கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களின் செய்திகளை வந்தன. இந்த செய்தி முழுக்க முழுக்க பொய் என்று தற்போது தெரியவந்துள்ளது

புஷ்பவனம் குப்புசாமி மகள் பல்லவி தனது முகநூலில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நான் வீட்டில்தான் பத்திரமாக இருக்கிறேன். எங்கேயும் சொல்லவில்லை. எனது தந்தையோ தாயோ காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவும் இல்லை. எனது தந்தை நேற்று இரவிலிருந்து ஊரிலேயே இல்லை. ஊரில் இல்லாத ஒருவர் எப்படி புகார் கொடுத்தார் என்று செய்தி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. மீடியாக்கள் இந்த மாதிரி இந்த மாதிரி பொய் செய்தியை எப்படி பரப்பி விடுகிறார்கள் என்றும் எனக்கு புரியவில்லை

எனக்கு நேற்றிலிருந்து ஏகப்பட்ட போன் அழைப்புகள் வந்தது. முடிந்தவரை நான் அனைவருக்கும் பதில் கூறி வந்தேன். ஒரு கட்டத்தில் எனது போன் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது நான் காணாமல் போனதாக வெளிவந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது’ என்று தனது வீடியோவில் பல்லவி பதிவு செய்துள்ளார்

ஒரு சதவீதம் கூட உண்மையை இல்லாத ஒரு செய்தி அனைத்து ஊடகங்களிலும் எப்படி பரவியது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

 

https://www.facebook.com/pallavi.agarwalpk/videos/4175952259085356/

Leave a Reply

Your email address will not be published.