இயற்கை, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஜனநாதனின் அடுத்த படம் ‘புறம்போக்கு’.  இந்த படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, கார்த்திகா ஆகியோர் நடித்து வருகிறனர்.

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கடுங்குளிர் பிரதேசமான குலுமணாலியில் நடந்தது. இதையடுத்து தற்போது இதன் படப்பிடிப்பு கடும் வெப்ப பிரதேசமான ராஜஸ்தான் பாலைவனத்தில் நடந்து வருகிறது.

கார்த்திகா, இந்த பாலைவனத்தில் ராணுவ வீரர்கள் உபயோகிக்கும் ஜீப்பை ஓட்டுவதாக சில காட்சிகள் நேற்று முன் தினம் படமாக்கப்பட்டது. கடுமையான குளிரில் படப்பிடிப்பு நடந்த சில நாட்கள் இடைவெளியில் கடும் வெப்பத்தில் படப்பிடிப்பு நடந்து வருவதால் படக்குழுவினர் மிகவும் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் கார்த்திகா த்ரில்லான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply