ஐ.பி.எல். 2வது தகுதிப்போட்டி. சென்னை சூப்பர்கிங்ஸ் அதிர்ச்சி தோல்வி.

8ஐ.பி.எல் போட்டி தொடரின் முக்கிய போட்டியான இறுதிபோட்டிக்கு தகுதி பெறும் 2வது தகுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் சென்னை அணி பஞ்சாப் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பஞ்சாப் அணியினரை பேட்டிங் செய்ய அழைத்தார். பஞ்சாப் அணியின் சேவாக் நேற்று விஸ்வரூபம் எடுத்து அதிரடியாக 58 பந்துகளில் 122 ரன்கள் எடுத்த்தால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 20 ஓவர்களுக்கு 226 ஆனது.

வெற்றி பெற 227 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில் சுரேஷ் ரெய்னா நேற்று தனது அதிரடியை வெளிப்படுத்தினார். 15 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் 25 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்த வேளையில் எதிர்பாராதவகையில் ரன் அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னாவின் விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பின்னர் வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆனதால் சென்னை அணி 20 ஓவர்களில் 202 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.

நாளை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

Leave a Reply