முதல்வர் மருமகன் வீட்டில் சோதனை: கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றியதாக தகவல்!

பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதும், இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் திடீரென பஞ்சாப் முதல்வரின் மருமகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது

இந்த சோதனையில் கோடிக்கணக்கான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பஞ்சாப் முதல்வர் மருமகனின் நண்பர் வீட்டிலும் சோதனை நடந்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.