ஒரு யூனிட்டுக்கு ரூ.3 கட்டணம் குறைவு: முதல்வர் அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வந்த நிலையில் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூபாய் மூன்று குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் இனி பொதுமக்களுக்கு மின்கட்டணமாக பாதிக்கும் குறைவாகவே வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது