shadow

வெள்ளை நிறத்தில் மட்டுமே உள்ளாடை: மாணவிகளுக்கு நிபந்தனை விதித்த பள்ளி நிர்வாகம்

புனேவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் வெள்ளை நிறத்தில் மட்டுமே உள்ளாடை அணிய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதால் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புனேவில் உள்ள ஒரு பள்ளியில் சமீபத்தில் மாணவிகளின் டைரியில் சில நிபந்தனைகளை விதித்து அதில் பெற்றோர்கள் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி மாணவிகள் இனிமேல் வெள்ளை நிறம் அல்லது அவர்களுடைய ஸ்கின் நிறத்தில் மட்டுமே உள்ளாடை அணிய வேண்டும் என்றும் மாணவிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தண்ணீர் அருந்தவும்என்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளுக்கு மாணவிகளும், பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த எதிர்ப்புகளை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மாணவிகளின் பாதுகாப்பு கருதியே இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளதால் இதனை எதிர்த்து புனே கல்வி இயக்குனர் அலுவலகத்தில் புகார் செய்ய பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply