shadow

ஐ.பி.எல் கிரிக்கெட்: ஐதராபாத்தை வென்றது புனே

Steven Smith of Rising Pune Supergiants plays a shot during match 22 of the Vivo IPL 2016 (Indian Premier League ) between the Sunrisers Hyderabad and the Rising Pune Supergiants held at the Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad on the 26th April 2016 Photo by Rahul Gulati / IPL/ SPORTZPICS

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தோனி தலைமையிலான புனே அணி, வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற புனே அணி, ஐதராபாத் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களத்தில் இரங்கிய ஐதராபாத் அணி முதல் ஓவரிலேயே வார்னர் விக்கெட்டை இழந்தது. பின்னர் தவான் தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்நிலையில் 119 ரன்கள் மட்டுமே எடுத்தால் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய புனே அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 94 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. எனவே மீண்டும் ஆட்டம் தொடங்க முடியாத நிலை இருந்ததால் டக்வொர்த்-லீவீஸ் முறையின்படி புனே அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டநாயகனாக புனே அணியின் டிண்டா தேர்வு செய்யப்பட்டார்.

இன்று டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

Leave a Reply