shadow

12 மணி நேரத்தில் விஜய்யின் ‘புலி’ டிரைலர் செய்த சாதனை

puliவிஜய் நடித்த ‘புலி’ படத்தின் டிரைலர் நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு யூடியூப் இணையதளத்தில் ரிலீஸாகியது. இந்த டிரைலர் வெளியாக 12 மணி நேரமே ஆகியுள்ள நிலையில் தற்போது 4 லட்சம் பார்வையாளர்களை கடந்துவிட்டது. அரைநாளில் 4 லட்சம் பார்வையாளர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. அதுமட்டுமின்றி இந்த 12 மணி நேரங்களில் இந்த டிரைலரை சுமார் 42,000க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘புலி’ டிரைலரின் வெற்றியை கொண்டாடும் வகையில் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் #PuliTrailerCountdownBegins என்ற பெயரில் ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை  ட்ரெண்ட் செட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

புலி படத்தின் அதிகாப்பூர்வ டிரெய்லரை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்ட தருணத்தில் ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்புகளை கொடுத்துள்ளனர். குள்ளர்கள், கம்பீர மகாராணியாக ஸ்ரீதேவி, விஜய்யின் மாஸ் எண்ட்ரி என டிரெய்லர் பிரம்மாண்டமாகவே இருக்கிறது. எனினும் டிரைலரில் உள்ள பிரமாண்டம் படத்திலும் இருக்குமா? என்பதை வரும் செப்டம்பர் 17 வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply