shadow

நான் ஈ, மகதீராவை முந்தியது விஜய்யின் ‘புலி’

naan eeபெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள விஜய்யின் ‘புலி’ படத்தில் மொத்தம் 2200 கிராபிக்ஸ் ஷாட்டுகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

 விஜய் நடித்திருக்கும் ‘புலி’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மேற்பார்வையிட்டு வரும் கிராபிக்ஸ் வல்லுநர் கமலக்கண்ணன், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குறித்து கூறியபோது, “‘நான் ஈ’ படத்துக்கு 1200 கிராபிக்ஸ் ஷாட்களும், ‘மகாதீரா’ படத்துக்கு 1700 கிராபிக்ஸ் ஷாட்களும் பண்ணியிருந்தேன். ‘புலி’ படத்துக்கு 2200 ஷாட்கள் கிராபிக்ஸ் பண்ணியிருக்கிறோம். நான் பணியாற்றிய படங்களில் அதிகமான கிராபிக்ஸ் ஷாட்ஸ் உள்ள படம் ‘புலி’. சிம்புதேவன் முதலில் 2700 ஷாட்ஸ் கொடுத்தார், அதிலிருந்து 2200 ஷாட்களாக குறைத்தோம். இப்படத்துக்கான கிராபிக்ஸ் பணிகள் ரஷ்யா, உக்ரைன், பல்கேரியா, சுவீடன், சென்னை, பெங்களூர் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது கிராபிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், பிரபு, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கி இருக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். ஷிபு தமீன்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 17ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ராஜமெளலி இயக்கிய ‘மகாதீரா’, ‘நான் ஈ’ ஆகிய படங்களின் கிராபிக்ஸ் காட்சிகளை அமைத்த கமலக்கண்ணன் அந்த படங்களுக்காக தேசிய விருது வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply