இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டத்தை தடியடி நடத்தி தடுத்த போலீசார்

இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டத்தை தடியடி நடத்தி தடுத்த போலீசார்

அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் தமிழகத்தை மட்டுமின்றி பக்கத்து மாநிலமான புதுச்சேரியிலும் பாதிப்பு அடைய செய்துள்ள நிலையில் புதுவையிலும் ஆங்காங்கே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த இடத்தில் நேற்று இரவு மாணவர்கள் கூடி போராட்டம் நடத்தினர். நேரம் ஆக ஆக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டம் அதிகமானதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்தை கலைக்க முடிவு செய்த புதுவை போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply