20 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பு மாணவர்கள் உற்சாகம்

புதுவை மாநிலத்தில் 20 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதை அடுத்து மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

புதுவை மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமீபத்தில் வகுப்புகள் தொடங்கின. இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கும் என புதுவை அரசு தெரிவித்துள்ளது

ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் இயங்கும் என்றும் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும் என்றும் தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும் என்றும் புதுவை அரசு அறிவித்துள்ளது.