எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதா படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது எப்போது?

புதுவை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுர்வேதா, கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு நவம்பர் 8ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வில் 108 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களும் 138 மதிப்பெண் எடுத்த பொதுப்பிரிவு பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

இந்த விண்ணப்பங்களை www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.