புதுவை முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி:

பொதுமக்கள் அதிர்ச்சி

புதுவை முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதை அடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புதுவை முன்னாள் அமைச்சர் ஏழுமலைக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் ஏழுமலை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ஏழுமலை கடந்த 1998 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகவும், 2001 ஆண்டில் புதுவை மாநில உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.