கிரண்பேடி ஆளுனரா? எதிர்க்கட்சி தலைவரா? முதலமைச்சர் நாராயணசாமி

கிரண்பேடி ஆளுனரா? எதிர்க்கட்சி தலைவரா? முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி மாநிலத்தில் கிரண்பேடி கவர்னர் பொறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் நாராயணசாமிக்கும் கிரண்பேடிக்கும் இடையே பனிப்போர் நடந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கருத்துவேறுபாடு உச்சத்தில் உள்ளது.

புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை ஆளுநர் கிரண்பேடி முடக்குவதாக முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘கிரண்பேடி, ஆளுநரா அல்லது எதிர்க்கட்சி தலைவரா என தெரியவில்லை, இதற்கு முடிவு எட்டும் காலம் விரைவில் வரும்’ என்று கூறினார்.

மேலும் உண்மைக்கு புறம்பான செயல்களை செய்வது, கிரண்பேடிக்கு வாடிக்கையாகிவிட்டதாக கூறிய முதல்வர் நாராயணசாமி, இதுகுறித்து கிரண்பேடிக்கு பலமுறை கடிதம் எழுதியும் அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று கூறினார்

Leave a Reply