இந்தியா முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களாக தீவிரமாக செய்துவந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி இன்று இறுதி வாக்களர் பட்டியல் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவர் 1, 2014ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு தயாரான இந்த வாக்காளர் பட்டியலில் புதிதாக சுமார் 30 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கபட்டுள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் கடந்த 6ஆம் தேதி வெளியிடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதிக்கட்ட பணிகள் முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கபட்டு இன்று வெளியிடப்படுகிறது.

இந்த வாக்காளர் பட்டியில் பொதுமக்கள் பார்வைக்காக பல இடங்களில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், வாக்காளர்கள் இந்த பட்டியலை பார்த்து தங்கள் வாக்குகளை உறுதி செய்துகொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெறாதவர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டளிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply