16சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியின் பணிபுரியும் தமிழ்த்துறை தலைவர் சி.அ.ராஜராஜன் மற்றும் பேராசிரியர் அ.பிரின்ஸ் ஆகியோர் மீது பாலியல் புகார் கொடுத்த காரணத்தால் பேராசிரியர் ஒருவர் பழிவாங்கும் நோக்கத்தோடு டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

டிஸ்மிஸ் செய்யப்பட்ட பேராசிரியரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டியும், பாலியல் தொல்லை தருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோரிக்கை விடுத்தபடி போராட்டம் செய்தனர். இந்த போராட்டம் காரணமாக நுங்கம்பாக்கத்தில் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

இந்த போராட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.தாமு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மாவட்டத்தலைவர் மரியா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர பா.ஆறுமுகம், மாவட்டத் தலைவர் நிருபன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply