ஓடிடியா? தியேட்டரா? முடிவெடுக்கும் தயாரிப்பாளர்கள்!

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து ஓடிடியா? தியேட்டரா? என முடிவெடுக்கும் நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு பிரிமியர் காட்சிக்கும் திரையரங்குகள் வழங்குவதில்லை என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் படங்களை மட்டுமே திரையரங்குகளில் திரையிடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.