shadow

bhoologamஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடித்து முடித்துள்ள பூலோகம் படத்தை பார்த்த தயாரிப்பாளர் படத்தின் க்ளைமாக்ஸ் குத்துச்சண்டை மிக நீளமாக இருப்பதால் அந்த சண்டையை மாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் ஆகிய இருவரும் க்ளைமாக்ஸை மாற்ற மறுப்பதால் பெரும் பிரச்சனை உருவாகியுள்ளது.

பூலோகம் படத்தின் க்ளைமாக்ஸை பார்த்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் 30 நிமிட க்ளைமாக்ஸ் சண்டையை ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள் என்றும், எனவே அந்த சண்டைக்காட்சியை முற்றிலும் நீக்கிவிட்டு விறுவிறுப்பான பத்து நிமிட சண்டைகாட்சியை மீண்டும் படமாக்குமாறும் கூறியுள்ளார்.

ஆனால் ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் ஆகியோர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சமாதான பேசி முடிக்க இரு தரப்பினர்களிடமும் த்ரிஷா பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply