shadow

சேட்டிலைட் டிவி, ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இணணயதளம்: அடுத்தடுத்த அதிரடியில் விஷால்

தமிழ் சினிமாவில் முதலீடு போட்டு சம்பாதிக்கும் கூட்டம் ஒருபுறம் என்றால் சினிமாவில் ஒரு பைசா கூட முதலீடு போடாமல் சினிமாவை வைத்தே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் கூட்டத்திற்கு ஆப்பு வைக்க விஷால் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவருடைய முதல் ஆப்பு ஆன்லைன் புக்கிங் இணையதளங்கள்

ஆன்லைனில் திரையரங்குகளில் டிக்கெட் புக் செய்யும்போது தியேட்டர் கட்டணத்தைவிட ரூ.30 ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் கூடுதல் தொகை வசூல் செய்யப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் படம் பார்க்கப்போனால் ரூ.150 அந்த இணணயதள ஓனருக்கு செல்கிறது. சினிமாவுக்கும் அந்த இணையதளத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத இணையதளங்கள் இதுவரை கொள்ளை அடுத்து வந்தன. இதற்கு ஆப்பு வைக்கும் வகையில் விஷால் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி தயாரிப்பாளர் சங்கமே ஒரு ஆன்லைன் இணையதளம் தொடங்கி அதில் ரூ.10 மட்டுமே கூடுதலாக வசூல் செய்யப்படும் என்றும் இதனால் டிக்கெட் புக்கிங் செய்யும் ஆடியன்ஸ்களுக்கு ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.20 மிச்சமாகும் என்றும் தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த அதிரடியால் ஆன்லைன் புக்கிங் இணையதளங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் இரண்டு சேட்டிலைட் சேனல்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆரம்பிக்கப்படும். இந்த சேனலில்தான் இனிமேல் அனைத்து படங்களும் திரையிடப்படும். அதுமட்டுமின்றி பாடல்கள், காமெடி காட்சிகள் என எந்தவொரு கிளிப்பிங்ஸும் இனிமேல் தனியார் சேட்டிலைட் சேனல்களுக்கு கிடையாது என்றும் விஷால் அறிவித்துள்ளார். சினிமா இல்லாமல் இப்போதுள்ள முன்னணி சேட்டிலைட் சேனல்கள் எடுபடுமா? என்பது பெரிய கேள்விக்குறி

Leave a Reply