shadow

8e712984-280d-432a-b645-f868bd3dd86b_S_secvpf

கடந்த 20 ஆண்டுகளில் நமது உணவு முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் சமைத்து சாப்பிடாமல் உணவகங்களுக்கு செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. வீட்டிலும் கூட புத்தம்புது காய்கறி, மாமிசங்களை பயன்படுத்துவதை விட குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நாள் கணக்கில் பயன்படுத்தும் பழக்கம் வந்து விட்டது.

இப்படி உணவுப் பொருட்களை வைத்து பயன்படுத்துவதற்காகவே பெரும் நிறுவனங்கள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை விற்கத் தொடங்கியுள்ளன. இந்த வரிசையில் மாமிசமும் இந்தியாவிற்கு வரத்தொடங்கி விட்டது. அதிலும் மாட்டிறைச்சி, பன்றி மாமிசம், இஞ்சி பூண்டு கொண்டு தயாரிக்கப்பட்ட இன்னும் சில உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை தான் கெடுதலைத் தருகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவை 150 கிராம் உண்டால் அது 34 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு சமம் என்கிறது, ஆய்வு.

இந்த ரசாயனத்தில் உள்ள ‘நைட்ரெட்‘ என்ற பொருள்தான் உணவை கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. இதில் ‘கார்சிநோஜென்‘ என்ற புற்றுநோயை உருவாக்கும் பொருள் அதிகம் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அதிக உப்பும், கொழுப்பும் வேறு உள்ளன. இது மனித ஆரோக்கியத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. அதனால் வளர்ந்த நாடுகள் பல இந்த உணவு வகைகளுக்கு தடை விதித்துள்ளன. இந்தியா போன்ற சில நாடுகள் தடை விதிக்காமல் இருக்கின்றன.

அதனால் மற்ற நாடுகள் அங்கு தடை செய்த பொருட்களையெல்லாம் இந்தியாவில் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மற்ற நோய்களைக் கூட சுலபமாக கண்டறிந்து விடலாம். புற்றுநோயை கண்டுபிடிப்பது கடினம். முற்றிய நிலையில்தான் பாதிப்பு தெரியத் தொடங்கும். தினமும் 50 கிராம் பதப்படுத்தப்பட்ட மாமிசத்தை சாப்பிட்டாலே இந்த பாதிப்பு ஏற்படும் என்கின்றன, மருத்துவ ஆய்வுகள். நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால் பதப்படுத்தப்பட்ட மாமிசத்தையும், உணவு வகைகளையும் ஒதுக்குங்கள் என்கிறார்கள், மருத்துவர்கள்.

Leave a Reply