shadow

791ff7a6-5404-4ebb-a435-011bd28dffae_S_secvpf

உடலுக்கு வலுவையும், உற்சாகத்தையும் தருவது உயிர்ச்சத்துக்களான வைட்டமின்கள்தான். இந்த உயிர்ச் சத்துக்களானது உடலுக்கு அவசியத் தேவையாகும். வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் சரிவிகிதத்தில் உடலில் சேர்ந்தால்தான் உடல் நோய் நொடிகளின் தாக்குதலிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க முடியும். 

• வைட்டமின் ‘C’ குறைவினால் ஸ்கர்வி என்ற பல் ஈறுகளிலிருந்து இரத்தம் கசியும் நோய் உண்டாகிறது.

• வைட்டமின் ‘C’ குறைவினால் சரும வறட்சி ஏற்படுகிறது. அதனால் சருமம் பளபளப்பு தன்மையை இழக்கிறது. மேலும் சருமத்தில் காயம் ஏதும் உண்டானால் அவை எளிதில் ஆறாத தண்மையை உண்டாக்குகிறது.

• வைட்டமின் ‘C’ குறைவால் ஒவ்வாமை, இரத்தச் சோகை உண்டாகும். 

• இந்த உயிர்ச்சத்து குறைவதால் தசைகள் பலவீனமடைகின்றன.

• பற்கள் வலிமையற்று பல்லீறுகளில் இரத்தம் கசிந்து கொண்டேயிருக்கும். இதனால் வாயில் துர்நாற்றம் உண்டாகும். 

• பசியை குறைத்து, சீரண உறுப்புகளின் செயல்பாட்டை சீர்குலைக்கிறது.

• எலும்பு மூட்டுக்கள், முக்கியமாக கால் எலும்பு மூட்டுகளில் உள்ள நீரினை பசை போல் ஆக்கி மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகிறது.

• நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது.

• முகம் மற்றும் சருமத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள், கரும்படலம் முதலியவை வைட்டமின் ‘சி’ குறைவால் அதிகமாகிறது.

Leave a Reply