முதல் முறையாக பிரியா பவானி சங்கர் எடுக்கும் ரிஸ்க்!

மேயாதமான் படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல வெற்றிப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் ப்ரியா பவானிசங்கர் தற்போது கமலஹாசனின் ’இந்தியன் 2’ படத்தில்நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் சித்தார்த் ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் பிரபல நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை செல்லா அய்யாவு என்பவர் இயக்கவுள்ளார் இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த சிலுக்குவார்பட்டிசிங்கம் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் அதிக ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க உள்ளதாகவும், இதனையடுத்து அவர் தற்போது ஸ்டண்ட் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

விஷ்ணு விஷால் பிரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படம் விஷ்ணு, ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவருக்கும் திருப்பத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply