shadow

அட்லியின் எட்டாவது திருமண நாள்: பிரியா அட்லியின் ரொமான்ஸ் பதிவு

இயக்குனர் அட்லி, பிரியா அட்லியை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் இன்றுடன் இந்த திருமணம் நடந்து எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது

இதனை அடுத்து பிரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு செய்துள்ளார்

தங்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகிவிட்டது என்றும் என்றென்றும் இதே போல் நாங்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றும் என் அன்பான கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் எனது கணவர்தான் எனது பலம் மற்றும் பலவீனம் என்றும், அவரை என்றென்றும் காதலிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.