ஆந்திரா மாநிலம் மெகபூப்நகரில், பெங்களூருவிலிருந்து ஐதராபாதிற்கு சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 44 பயணிகள் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
இந்த பேருந்தில் 43 பயணிகள், ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஐதராபாத்தில் இருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கும் மெகபூப்நகரில் இது தீப்பிடித்து எரிந்தது.
இதில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த மற்ற பயணிகள் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நடந்தப்போது பெரும்பாலான பயணிகள் உறங்கிக்கொண்டிருந்ததால் அனைவரும் உடல் கருகி பலியாகியுள்ளனர். பேருந்தில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் முற்றிலும் கருகிய நிலையில் உள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் எற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தீபாவளிக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.