பிரிண்டிங் மிஸ்டேக் உள்ள புதிய 500 ரூபாய் நோட்டை என்ன செய்யலாம். ஆர்பிஐ

பிரிண்டிங் மிஸ்டேக் உள்ள புதிய 500 ரூபாய் நோட்டை என்ன செய்யலாம். ஆர்பிஐ

500-noteஇந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்ட புதிய ரூ.500 நோட்டுக்களில் ஒருசில நோட்டுக்கள் பிரிண்டிங் மிஸ்டேக் உடன் உள்ளதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளன.

நேற்று முதல் தான் தமிழகத்தில் புதிய ரூ.500 நோட்டுக்கள் புழக்கத்தீல் வந்துள்ளது. ஆனால் அதற்குள் புதிய நோட்டுக்களில் பிரிண்டிங் மிஸ்டேக் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்படி புதிய 500 ரூபாய் நோட்டுகள் சிலவற்றில் மகாத்மா காந்தியின் உருவத்துக்கு அருகே காந்தியின் நிழல் தெரிகிறதாம். சில நோட்டுகளில் எழுத்துகளின் அலைன்மென்ட் சீராக இல்லை என்று சொல்லப்படுகிறது. சிலருக்கு வேறு Shadeகளில் கூட புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் செய்தி தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா கூறியபோது,, ‘அவசர அவசரமாக தயார் செய்ததால், பிரின்ட்டிங் மிஸ்டேக் ஆகியிருக்கும். இரண்டுமே செல்லும்’ என்றும் ஒருவேளை செல்லாது என்று யாராவது கூறினால் அந்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கியில் திருப்பி அளித்து நல்ல நோட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்..

Leave a Reply