பிரிட்டன் இளவரசரின் 3வது குட்டி இளவரசருக்கு பெயர் வைப்பு

பிரிட்டன் இளவரசரின் 3வது குட்டி இளவரசருக்கு பெயர் வைப்பு

பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் தம்பதிக்கு சமீபத்தில் பிறந்த 3வது குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதிக்கு ஏற்கனவே ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமான கேத் மிடில்டனுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 3வது ஆண் குழந்தை பிறந்தது.

புதிதாக பிறந்த குட்டி இளவரசருக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின், மிட்சேல் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், வில்லியம் – கேத் மிடில்டனுக்கு மூன்றாவதாக பிறந்த குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அரச குடும்பத்தினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.