shadow

40% கூடுதல் வரி. சிகரெட்டை ஒழிக்க கலிபோர்னியா மாகாணம் அதிரடி நடவடிக்கை

சிகரெட் புகைப்பது உடல்நலத்திற்கு தீங்கானது என்ற அறிவுரையை பல ஆண்டுகளாக போதித்து வந்தபோதிலும் பொதுமக்களிடையே புகைக்கும் பழக்கம் நாளடைவில் அதிகரித்து கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.

இந்நிலையில் பொதுமக்களிடன் சிகரெட்டை பழக்கத்தை குறைக்க அல்லது நிறுத்த கலிபோர்னியா மாகாண நிர்வாகம் அதிரடியாக சிகரெட் பாக்கெட் ஒன்றுக்கு 40% விலையை உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி 1.83% கூடுதல் நிர்வாக வரியும் விதிக்கப்பட்டுள்ளதால் பாக்கெட் ஒன்றின் விலை இதுவரை $20 ஆக இருந்த நிலையில் தற்போது $40 ஆக உயர்ந்துவிட்டது.

இந்த விலையேற்றம் காரணமாக கலிபோர்னியாவின் பெரும்பாலான பொதுமக்கள் சிகரெட் பழக்கத்தை குறைத்துவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த நடைமுறை வெற்றி பெற்றால் அமெரிக்கா முழுவதும் சிகரெட்டிற்கு 40% வரிவிதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply