இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று தெலுங்கானா மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார். ஆனாலும் தற்போதைய குழப்பமான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறுமா? என்பது சந்தேகம்தான் என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

தெலுங்கானா மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால் பதவியை ராஜினாமா செய்வேன் ன ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஒருபுறம் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் ஆந்திர எம்.பிக்கள் கட்சி வேறுபாடு இன்றி தெலுங்கானாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இதனால் பாராளுமன்ற நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கபட்டு வருகிறது.

இவ்வாறான பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜனாதிபதி ஒப்புதல் அளித்த தெலுங்கானா மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா என்பது கேள்விக்குறிதான்.

Leave a Reply