shadow

உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலே போதுமானது. ஜனாதிபதி ஒப்புதல் தேவையில்லையா?

ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இந்த சட்டத்தில் ஜனாதிபதி கையெழுத்திட அவருடைய மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னொரு தரப்பில் இருந்து வந்துள்ள தகவலின்படி மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஏற்படுத்தியுள்ள இந்த சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் தேவையில்லை என்றும் மாநில கவர்னரே சட்டத்தை பிறப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலே போதுமானது என்பதால் குடியரசுத்தலைவர் ஒப்புதல் இன்றி கவர்னரே சட்டத்தை இயற்றுவார் என்றும் இதற்காக மும்பையில் இருந்து சென்னைக்கு இன்று ஆளுனர் வித்யாசகர் ராவ் வரவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இன்று அல்லது நாளை பிறப்பிக்கப்பட்டவுடன் தமிழகம் முழுவதும் வாடி வாசல் திறந்துவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply