டெல்லியில் ஜனாதபதி ஆட்சி?

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாத நிலையில் நேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுனரை நேற்று சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதம் இன்று உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஒப்புதல் கடிதம் கொடுத்த பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது.

இதையடுத்து டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸும் ஆட்சி அமைக்க விருப்பமில்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டபடியால், ஜனாதிபதி ஆட்சிதான் டெல்லியில் அமல்படுத்தபடும் என்று டெல்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Leave a Reply