கடந்த வாரம் உளுந்தூர்பேட்டையில் நடந்த தேமுதிக ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது வழக்கு தொடரப்பட்டது. அதுபற்றி கருத்து கூறிய பிரேமலதா, அவதூறு வழக்கை சட்டப்படி சந்திப்பேன்’ என்று கூறினார்.

நேற்று மாலை மதுரையில் சென்னைக்கு வந்த பிரேமலதா,  செய்தியாளர்களுக்கு விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது ‘தமிழகத்தில் நடக்காத எதையுமே நாங்கள் ஊழல் எதிர்ப்பு  மாநாட்டில் பேசவில்லை. எனவே என் மீது தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்தாகிவிட்டது. முடிவை விரைவில் விஜயகாந்த் அறிவிப்பார்.

தற்போது வேட்பாளர் தேர்வில் விஜயகாந்த் பிசியாக இருப்பதாகவும், நேர்காணல் முடிந்ததும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply