ரீடுவீட் செய்யாவிட்டால் கர்ப்பத்தை கலைத்துவிடுவேன்: இளம்பெண் மிரட்டல்
ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவு செய்யும் ஸ்டேட்டஸ்களுக்கு லைக் கிடைக்கவில்லை என்றால் டென்ஷன் ஆகும் பலர் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தனது டுவிட்டுக்கு ரீடுவீட் செய்யவில்லை என்றால் என்னுடைய நான்கு மாத கர்ப்பத்தை கலைத்துவிடுவேன் என்று ஒரு இளம்பெண் மிரட்டியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஒருவர் தான் கர்ப்பமாகியிருப்பதாக புகைப்படத்துடன் ஒரு ஸ்டேட்டஸ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். நான்கு மாத கர்ப்பமாக இருக்கும் தனக்கு 4000 ரீடுவீட்டுக்கள் கிடைக்கவில்லை என்றால் கர்ப்பத்தை கலைத்துவிடுவேன் என்று ஒரு ஸ்டேட்டஸை பதிவு செய்தார்.
இதனால் அவருடைய ஃபாலோயர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அவரை கடிந்து கொண்டாலும் அவர் சொன்னதை செய்யும் குணம் உடையவர் என்பதால் ரீடுவீட் செய்தனர். இரண்டே நாட்களில் அவருடைய பதிவுக்கு 10,000 ரீடுவீட்டுக்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.