ரஜினி டுவீட் நீக்கப்பட்டதற்கு பிரசந்த் கிஷோர் காரணமா?

ரஜினி டுவீட் நீக்கப்பட்டதற்கு பிரசந்த் கிஷோர் காரணமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் டுவிட்டர் வீடியோ நீக்கப்பட்டதற்கு பிரசாந்த் கிஷோர் தான் காரணம் என ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டார் அதில் பிரதமர் அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவுக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்

மேலும் வைரஸை 12 முதல் 14 மணி நேரம் கடந்துவிட்டால் மூன்றாவது நிலையில் இருந்து இந்தியா தப்பி விடும் என்று அவர் கூறியிருந்தார்

ரஜினியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அவரது வீடியோவை டுவிட்டர் இந்தியா நீக்கி உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் ரஜினி ஆதரவாளர்கள் சிலர் ’ரஜினியின் இந்த வீடியோ நீக்கப்பட்டதற்கு பிரசாந்த் கிஷோர் தான் காரணம் என்றும் திமுக மற்றும் பிரசாந்த் கிஷோர் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் இந்தியாவுக்கு புகார் செய்ததாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்

ரஜினியின் நீக்கப்பட்டதற்கு பிரசாந்த் கிஷோர் தான் காரணமா என்பது போகப்போகத்தான் தெரியவரும்

Leave a Reply

Your email address will not be published.