முக ஸ்டாலினுக்கு ஓனர் ஆகிவிட்டாரா பிரசாந்த் கிஷோர்? அரசியல் விமர்சகர் கருத்து

50ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் உள்ள ஒரு கட்சி, பெரியார் அண்ணா கருணாநிதி கொள்கைகளை கடைபிடித்து வரும் ஒரு கட்சியை, வடநாட்டுக்காரரான பிரசாந்த் கிஷோர் தான் சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

இது குறித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கிண்டலடித்து வரும் நிலையில் இது குறித்து பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கூறியதாவது: பிரசாந்த் கிஷோர் திமுகவை நடத்தப் போகிறார் என்றால் வெறும் சமூக வலைதளங்களில் டுவீட் போடுவது மட்டும் அவரது பணி அல்ல, ஒரு கட்சியின் தலைவர் என்னென்ன செய்ய வேண்டும், எங்கு பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், எதைப் பேச வேண்டும், என்று முடிவு செய்வதே பிரசாந்த் கிஷோர் டீம் தான் என்றும் ஒரு வேட்பாளர் இந்த தொகுதியில் நின்றால் வெற்றி தருவாரா? மாட்டாரா? இந்த வேட்பாளரால் லாபமா? நஷ்டமா? என்பது உள்பட அனைத்து முடிவுகளையும் அந்த டீம் தான்எடுக்கும் என்றும் முக ஸ்டாலின் கட்சியின் தலைவராக இருந்தாலும் முக ஸ்டாலின் ஓனர் போல் பிரசாந்த் தான் செயல்படுவார் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வரும் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் உதவியால், திமுக ஆட்சியை பிடித்து ஸ்டாலின் முதல்வர் ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply