பெல்ஜியம் மன்னர் பிலிப், துருக்கி நாட்டு அதிபர் ஆகியோரின் அழைப்பை ஏற்று இரு நாடுகளுக்கும் 6 நாள் பயணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று புறப்பட்டார். முதலில் பெல்ஜியம் செல்லும் அவர், மன்னர் பிலிப்புடன் சேர்ந்து ஐரோப்பிய, இந்திய கலாசார விழாவை தொடங்கி வைக்கிறார். இந்திய ஜனாதிபதி ஒருவர் பெல்ஜியம் செல்வது இதுவே முதல் முறை. மன்னர் பிலிப்புடன் இருதரப்பு உறவுகள் மற்றும் கல்வி, கலாசார உறவு குறித்து பேச்சு நடத்துகிறார்.

5ம் தேதி துருக்கி செல்லும் பிரணாப், அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ஜனாதிபதியின் பயணத்தில் கல்வித்துறை மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஜனாதிபதியுடன் மத்திய அமைச்சர் வாசன், யுஜிசி தலைவர் வேத பிரகாஷ், டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐதராபாத் பல்கலையை சேர்ந்த துணை வேந்தர்கள் மற்றும் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

Leave a Reply