shadow

vijay 59விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ படத்தின் போஸ் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது லண்டனில் குடும்பத்துடன் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் விஜய் சென்னை திரும்பியவுடன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘விஜய் 59’ படத்தில் வில்லன் வேடத்தில் பிரகாஷ்ராஜை படக்குழுவினர் அணுகியபோது அவர் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரகாஷ்ராஜ் தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் அவர் கடைசியாக நடித்த ‘ஓகே கண்மணி’ கேரக்டர் மக்கள் மனதில் நன்றாக பதிவாகிவிட்டதால், இனிமேல் தமிழில் குணசித்திர வேடங்களில் மட்டும் நடிக்கவுள்ளதாகவும், வில்லன் வேடத்தை தவிர்க்க நினைப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ‘விஜய் 59’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ உள்பட ஒருசில படங்களில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுத்து கொண்டுதான் வருகிறார். விஜய் படத்தில் மட்டும் அவர் நடிக்க மறுத்தது ஏன்? என்பது புரியாத புதிராக இருப்பதாகவே கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply