’அஜித் 61’ படத்தின் வில்லன் இவர்தான்: ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல்!

அஜித் நடிக்க உள்ள வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நடிக்க உள்ள ’அஜித் 61’ திரைப்படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த படத்தின் பூஜை விரைவில் நடைபெற உள்ளது என்பதும் இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று போனிகபூர் அலுவலத்திற்கு என்று பிரகாஷ்ராஜ் வருகை தந்ததாகவும் ’அஜித் 61’ படத்தின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன

எனவே அஜித்தின் அடுத்த படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது