ஊரடங்கு உத்தரவு ஜூன் வரை நீட்டிப்பா? மத்திய அமைச்சரின் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 14ம் தேதி முடிவடைகிறது. இருப்பினும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதாலும் இந்தியாவிலும் நாளுக்கு நாள் தோறும் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது. இந்த கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது

இதனை அடுத்து அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் கூறியதாவது: ற்போதைய சூழலை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வருகிறோம். நாட்டின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்படும். அப்படி எடுக்கப்பட்டால், உரிய நேரத்தில் அது அறிவிக்கப்படும்’ என்று கூறினார்.

இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவு வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply