மைனா படத்தின் மூலம் பெரிய இயக்குனர் வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்ட இயக்குனர் பிரபு சாலமன் தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் படம் கயல். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் தயாரிக்கும் பணி குறித்து இயக்குனருக்கு தயாரிப்பாளருக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கயல் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு கிராமத்தில் சுனாமி புகுவது போல காட்சியை அமைத்து இருந்தார் இயக்குனர் பிரபு சாலமன். இந்த காட்சியை புழல் ஏரி அருகில் சுனாமி செட் போட்டு எடுத்து முடித்துவிட்டார். க்ளைமாகஸ் காட்சியை போட்டு பார்த்த தயாரிப்பாளருக்கு கொஞ்சம்கூட திருப்தியே இல்லையாம். குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் சேனலில் வருவது போல க்ளைமாக்ஸ் சொதப்பலாக இருக்கிறது என்று இயக்குனர் முன்பே கூறிவிட்டு, இந்த க்ளைமாக்ஸ் காட்சிகளை ரத்து செய்துவிட்டு, க்ளைமாக்சை முழுக்க முழுக்க கிராபிக்ஸில் எடுக்க உத்தரவிட்டாராம். ஆனால் இந்த கிராபிக்ஸ் வேலைகளை வேறு ஒரு கிராபிக்ஸ் நிபுணரிடம் ஒப்படைப்பதாகவும் சொல்லிவிட்டாராம்.

படத்தின் இயக்குனர் நான் இல்லாமல் வேறு ஒருவரை வைத்து க்ளைமாக்ஸ் காட்சியை எடுப்பதா? என்ற கடுப்பில் இருக்கும் பிரபு கிராபிக்ஸ் காட்சிகளையும் நானே வடிவமைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் தயாரிப்பாளரோ கும்கி படத்தின் க்ளைமாக்ஸில் நீங்கள் சொதப்பிய கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்து ஊரே சிரிக்கின்றது. அதனால் அந்த பொறுப்பை உங்களிடம் கொடுக்க முடியாது என உறுதியாக சொல்லிவிட்டாராம். இதனால் படு அப்செட்டில் இருக்கிறார் பிரபு சாலமன்.

Leave a Reply