பிரபுதேவாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

பிரபுதேவா நடிப்பில் ஹரி இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘தேள்’

இந்த படம் வரும் வெள்ளியன்று அதாவது டிசம்பர் 10ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் ரிலீஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் தற்போது திடீரென இந்த படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது