சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவியின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டு மின்சார வயர் முழுவதும் பழுதாகிவிட்டதால் அவரது வீடு இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இரண்டு நாட்கள் ஸ்ரீதேவி மகளின் தோழி வீட்டில் அனைவரும் தங்கியிருந்தனர். தற்போது ஸ்ரீதேவி மற்றும் அவரது கணவர் போனிகபூர் ஆகிய இருவரும் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். மகள்கள் மற்றும் போனிகபூரின் தாயார் ஆகியோர் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மற்றொரு வீட்டில் நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா தங்கியுள்ளார். ஸ்ரீதேவியின் வீடு தீப்பிடித்ததால், தங்குவதற்கு வீடின்றி தவிக்கும் ஸ்ரீதேவியை தொடர்பு கொண்ட பிரபுதேவா, தான் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்துகொள்வதாகவும், அந்த வீட்டில் ஸ்ரீதேவி தாராளமாக தங்கிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். தனது கணவர் போனிகபூரிடம் ஆலோசனை செய்து பதில் சொல்வதாக ஸ்ரீதேவி அவருக்கு பதிலளித்துள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியின் அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அவரது வீடு தீப்பிடித்து பலத்த சேதமடைந்தது. இதில் மிக முக்கியமாக ஸ்ரீதேவி தன் கையாலேயே வரைந்த மைக்கேல் ஜான்சனின் ஓவியம் ஒன்று முற்றிலும் சாம்பலானது. இதனால் ஸ்ரீதேவி மிகவும் வருத்தத்தில் உள்ளார். தற்போது அவரது வீட்டில் மிக வேகமாக மின்சார வேலைகள் பழுதுபார்க்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் அவரது வீடு முற்றிலும் தயாராகிவிடும் என்று கூறபடுகிறது.

Leave a Reply