தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 30 ஆண்டுகள் போர்க்குற்றம் செய்ததாகவும், அதை அமெரிக்கா போன்ற நாடுகள் தட்டிக்கேட்க தவறியதாகவும் இலங்கை அரசு திடீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக ஏற்கனவே பல தீர்மானங்களை கொண்டுவந்த அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானம் இயற்ற முயற்சி செய்து வருகிறது. இதனால் வெறுப்பு அடைந்த இலங்கை அரசு, இலங்கையில் விடுதலைப்புலிகளின் தலைவர் 30 ஆண்டுகள் போர்க்குற்றம் செய்ததாகவும், அதை அமெரிக்கா போன்ற நாடுகள் தட்டிக்கேட்க தவறியதாகவும் குற்றம் சாட்டியதோடு, அமெரிக்கா உள்பட பல நாடுகள் புலிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்து போரை தூண்டியுள்ளன என்றும் கூறியுள்ளது.

விடுதலைப்புலிகளுடன் நடந்த போரில் கைப்பற்றப்பட்ட ஏராளமான ஆயுதங்களில் அமெரிக்கா, நார்வே போன்ற நாடுகளின் சின்னங்கள் இருந்ததாகவும், புலிகளுக்கு ஆதரவு கொடுத்த நாடுகளின் பெயர்களை விரைவில் வெளிச்சம் போட்டு காட்ட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐக்கிய நடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வர இருக்கும் தீர்மானத்தை எதிர்கொள்ள இலங்கை அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசின் இந்த பகீர் குற்றச்சாட்டுக்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Reply